தோத்திரம் துதி பாத்திரா
தோத்திரம் துதி பாத்திரா
பல்லவி
தோத்திரம் துதி பாத்திரா உம்மை
இன்றும் என்றும் துதித்திடுவேன்
அனுபல்லவி
காத்தீரே என்னைக் கருத்தாக
வழுவாமல் என்னை உமக்காக
எடுத்தீர் எனையும் உமக்காக
கொடுத்தீர் உமையும் எனக்காக --- தோத்திரம்
சரணங்கள்
1. வல்ல வான ஞான விநோதா
துதியே துதியே துதித்திடுவேன்
எல்லாக் குறையும் தீர்த்தீரே
தொல்லை யாவும் தொலைத்தீரே
அல்லல் யாவும் அறுத்தீரே
அலையும் எனையும் மீட்டீரே --- தோத்திரம்
2. நம்பினோரைக் காக்கும் தேவா
துதியே துதியே துதித்திடுவேன்
அம்புவியாவும் படைத்தீரே
அம்பரா உந்தன் வாக்காலே
எம்பரா எல்லாம் ஈந்தீரே
நம்பினோர்க் குந்தன் தயவாலே --- தோத்திரம்
3. கண்ணின் மணிபோல் காத்தீரே எம்மைத்
துதியே துதியே துதித்திடுவேன்
அண்ணலே உந்தன் அருளாலே
அடியாரைக் கண் பார்த்தீரே
மன்னா எமக்கும் நீர் தாமே
எந்நாளும் எங்கள் துணை நீரே --- தோத்திரம்
4. தீயோன் அம்புகள் தாக்காதே எம்மைத்
துதியே துதியே துதித்திடுவேன்
தேவா நீர் உந்தன் சிறகாலே
தினமும் மூடிக் காத்தீரே
தீதணு காதும் மறைவினிலே
தேடியுமதடி தங்கிடுவேன் --- தோத்திரம்
5. அல்லேலூயா தோத்திரமே
துதியே துதியே துதித்திடுவேன்
அகில சிருஷ்டிகளும் துதிக்க
அடிமை துதியா திருப்பேனோ ?
அல்லும் பகலும் நித்தியமாய்
அன்பே உமையும் துதித்திடுவேன் --- தோத்திரம்