Naan Ummai Maranthaalum நான் உம்மை மறந்தாலும் – நீர்
நான் உம்மை மறந்தாலும் – நீர்
என்னை மறப்பதில்லை
என் நேசர் இயேசுவே நீர்
எனக்கு போதுமே
1. தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லை
தந்தை வெறுத்தாலும் நீர் என்னை விடுவதில்லை
உம் உள்ளங்கையிலே என்னை வரைந்து வைத்தீரே
உம்மை என்றுமே நான் பாடி போற்றுவேன் — நான்
2. பாவ சேற்றினில் வீழ்ந்து கிடந்தேனே
தூக்கி எடுத்து உம் மார்பில் அணைத்தீரே
வேத வசனமே என் பாதைக்கு தீபமே
முடிவு பரியந்தம் வழி நடத்துமே — நான்
3. உலகம் வெறுக்கலாம் உதறித் தள்ளலாம்
உன்னதர் நிழலிலே நான் சாய்ந்து உறங்குவேன்
உந்தன் கிருபையே எனக்கு போதுமே
என்னை என்றுமே நடத்திச் செல்லவே — நான்
naan ummai maranthaalum – neer
ennai marappathillai
en naesar yesuvae neer
enakku pothumae
1. thaay maranthaalum neer marappathillai
thanthai veruththaalum neer ennai viduvathillai
um ullangaiyilae ennai varainthu vaiththeerae
ummai entumae naan paati pottuvaen — naan
2. paava settinil veelnthu kidanthaenae
thookki eduththu um maarpil annaiththeerae
vaetha vasanamae en paathaikku theepamae
mutivu pariyantham vali nadaththumae — naan
3. ulakam verukkalaam utharith thallalaam
unnathar nilalilae naan saaynthu uranguvaen
unthan kirupaiyae enakku pothumae
ennai entumae nadaththich sellavae — naan