• waytochurch.com logo
Song # 17700

Nallathaiyae Naan Sollavum Seyyavum நல்லதையே நான் சொல்லவும் செய்யவும்


நல்லதையே நான் சொல்லவும் செய்யவும்
உள்ளத்தை இன்று உறுதிப்படுத்தும் ஐயா

1. ஆதி முதல் என்னைத் தெரிந்துக் கொண்டீர்
அப்பாவை நம்பி மீட்படைய
ஆவியினாலே தூய்மையாக்கி
ஆதிசயமாய் என்னை நடத்துகிறீர்
அப்பா… நன்றி… நன்றி – 2

2. பாவங்கள் செய்து மரித்துப் போயிருந்தேன்
கிறிஸ்துவோடே கூட உயிர்த்தெழச் செய்தீர்
கிருபையினாலே என்னை இரட்சித்தீர்
உன்னதங்களிலே உட்காரச் செய்தீர்

3. ஆண்டவர் கிறிஸ்துவின் மகிமையடைந்திட
ஆழைத்தீரே நன்றி ஐயா
ஆறுதல் தந்தீர் அன்பு கூர்ந்தீர்
பரலோகம் எதிர்நோக்கி வாழச் செய்தீர்

4. துதிக்கும் மகிமையக்கும் பாத்திரரே
பெருமையும் புகழ்ச்சியும் உமக்குத்தானே
ஞானமும் நன்றியும் வல்லமையும்
என்றென்றும் உமக்கே உரித்தாகட்டும்

5. ஆவியினாலே பெலப்படணும்
அன்பிலே வேரூன்றி திடம் பெறணும்
அப்பாவின் அன்பின் அகலம் ஆழம்
அறியும் ஆற்றல் நான் பெறணும்

6. எப்பொழுதும் நான் மகிழ்வுடன் இருந்து
இடைவிடாமல் ஜெபம் செய்யணும்
என்ன நேர்ந்தாலும் நன்றி சொல்லி
இயேசப்பா திருச்சித்தம் நிறைவேற்றணும்

nallathaiyae naan sollavum seyyavum
ullaththai intu uruthippaduththum aiyaa

1. aathi muthal ennaith therinthuk konnteer
appaavai nampi meetpataiya
aaviyinaalae thooymaiyaakki
aathisayamaay ennai nadaththukireer
appaa… nanti… nanti – 2

2. paavangal seythu mariththup poyirunthaen
kiristhuvotae kooda uyirththelach seytheer
kirupaiyinaalae ennai iratchiththeer
unnathangalilae utkaarach seytheer

3. aanndavar kiristhuvin makimaiyatainthida
aalaiththeerae nanti aiyaa
aaruthal thantheer anpu koorntheer
paralokam ethirnnokki vaalach seytheer

4. thuthikkum makimaiyakkum paaththirarae
perumaiyum pukalchchiyum umakkuththaanae
njaanamum nantiyum vallamaiyum
ententum umakkae uriththaakattum

5. aaviyinaalae pelappadanum
anpilae vaeroonti thidam peranum
appaavin anpin akalam aalam
ariyum aattal naan peranum

6. eppoluthum naan makilvudan irunthu
itaividaamal jepam seyyanum
enna naernthaalum nanti solli
iyaesappaa thiruchchiththam niraivaettanum


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com