Namakkoru Thakappan Untu நமக்கொரு தகப்பன் உண்டு
நமக்கொரு தகப்பன் உண்டு
அவரே நம் தெய்வம்
எல்லாமே அவரிலிருந்து வந்தன
நாமோ அவருக்காக வாழ்ந்திடுவோம்
1. திக்கற்ற பிள்ளைகளுக்கு தகப்பன் இவர்
தேவைகளை அறிந்த நல்ல தந்தை இவர்
உணவு ஊட்டுகிறார் உடையும் உடுத்துகிறார்
அப்பா.. அப்பா.. தகப்பனே என்று கூப்பிடுவோம்
2. ஆட்கொண்டு நடத்துகிறார் அதிசயமாய்
ஊருவாக்கி மகிழ்கின்றார் ஒவ்வோரு நாளும்
கேட்பதை கொடுத்திடுவார் தட்டும்போது திறந்திடுவார்
3. இரக்கம் நிறைந்த தந்தை அவர்
ஆறுதல் அனைத்திற்கும் ஊற்று அவர்
கணவனை இழந்தவர்க்கு காப்பாளர் அவர்தானே
4. குழந்தையாய் இருக்கும்போதே நேசித்தவர்
எகிப்தில் இருந்து என்னை அழைத்துக்கொண்டர்
கரங்கள் பிடித்துக் கொண்டு நடக்கப்பழக்குகிறார்
5. அன்புக் கரங்களாலே அணைத்துக் கொண்டார்
பாசக் கயிறுகளால் பிணைத்துக்கொண்டார்
நுகத்தை அகற்றிவிட்டார் ஜெயத்தை தந்துவிட்டார்
namakkoru thakappan unndu
avarae nam theyvam
ellaamae avarilirunthu vanthana
naamo avarukkaaka vaalnthiduvom
1. thikkatta pillaikalukku thakappan ivar
thaevaikalai arintha nalla thanthai ivar
unavu oottukiraar utaiyum uduththukiraar
appaa.. appaa.. thakappanae entu kooppiduvom
2. aatkonndu nadaththukiraar athisayamaay
ooruvaakki makilkintar ovvoru naalum
kaetpathai koduththiduvaar thattumpothu thiranthiduvaar
3. irakkam niraintha thanthai avar
aaruthal anaiththirkum oottu avar
kanavanai ilanthavarkku kaappaalar avarthaanae
4. kulanthaiyaay irukkumpothae naesiththavar
ekipthil irunthu ennai alaiththukkonndar
karangal pitiththuk konndu nadakkappalakkukiraar
5. anpuk karangalaalae annaiththuk konndaar
paasak kayirukalaal pinnaiththukkonndaar
nukaththai akattivittar jeyaththai thanthuvittar