Nee Illatha Ullam Oor Palaivanam நீ இல்லாத உள்ளம் ஓர் பாலைவனம்
நீ இல்லாத உள்ளம் ஓர் பாலைவனம்
எந்நாளும் உனக்காக ஏங்கும் மனம் (2)
இறைவா இறைவா இறைவா இறைவா
மழையாக வந்தும் மனம் மீது நின்றும் நனையாத நிலமாகினேன்
ஒளியாக நிறைந்தும் வாழ்வோடு இணைந்தும்
விடிவில்லா இரவாகினேன் (2)
உயிரூட்டும் அருள்மேகம் எனைச் சூழுமோ
வாழ்வேற்றும் ஒளிவெள்ளம் எனை ஆளுமோ (2) –இறைவா
கண்ணீரில் மூழ்கி போராடும் நிலைபோல்
தவிக்கின்றேன் உனைத் தேடியே
போர் வந்த காலம் துடிக்கின்ற புவிபோல்
அழுகின்றேன் துணை நாடியே (2)
எதனாலும் நிறையாத வெறுமையிது – உன்
அருளின்றி துயிலாத இதயம் இது (2) –இறைவா
nee illaatha ullam or paalaivanam
ennaalum unakkaaka aengum manam (2)
iraivaa iraivaa iraivaa iraivaa
malaiyaaka vanthum manam meethu nintum nanaiyaatha nilamaakinaen
oliyaaka nirainthum vaalvodu innainthum
vitivillaa iravaakinaen (2)
uyiroottum arulmaekam enaich soolumo
vaalvaettum olivellam enai aalumo (2) –iraivaa
kannnneeril moolki poraadum nilaipol
thavikkinten unaith thaetiyae
por vantha kaalam thutikkinta puvipol
alukinten thunnai naatiyae (2)
ethanaalum niraiyaatha verumaiyithu – un
arulinti thuyilaatha ithayam ithu (2) –iraivaa