ஒருதரம் ஒரே தரம் இதயத் தூய்மை வேண்டும்
Oru Tharam Ore Tharam
ஒருதரம் ஒரே தரம் இதயத் தூய்மை வேண்டும் 
இறைவரம் நிரந்தரம் உதயம் காண்பேன் மீண்டும் – 2 
முறிந்த உறவு துளிர காய்ந்த இதயம் குளிர 
மனதில் அமைதி நிலவ தூய அன்பு மலர – 2
இருளில் பிறந்து அருளில் வளர்ந்து மகனாய் வாழ்ந்த காலம் 
பின்பு பிரிந்து திரிந்த காலம் – 2 
இனியொரு தரம் இறைவனின் கரம் 
விலகிடின் என்ன சுகம் சொல் மனமே – 2
உலக வாழ்வில் உறவும் பிரிவும் விலக்கு இல்லா நியதி 
அதை மறுப்போர் இல்லை உறுதி – 2 
தினம் அவர் தரும் உறவினில் வரும் 
சுகமோ என்ன சுகம் என் மனமே – 2
orutharam orae tharam ithayath thooymai vaenndum 
iraivaram nirantharam uthayam kaannpaen meenndum – 2 
murintha uravu thulira kaayntha ithayam kulira 
manathil amaithi nilava thooya anpu malara – 2
irulil piranthu arulil valarnthu makanaay vaalntha kaalam 
pinpu pirinthu thirintha kaalam – 2 
iniyoru tharam iraivanin karam 
vilakitin enna sukam sol manamae – 2
ulaka vaalvil uravum pirivum vilakku illaa niyathi 
athai maruppor illai uruthi – 2 
thinam avar tharum uravinil varum 
sukamo enna sukam en manamae – 2

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter