• waytochurch.com logo
Song # 17929

Paamalai Padiduvom Savariyarae நல்ல காலம் பொறந்திருச்சு நாடும் வீடும் செழிச்சிருச்சு


நல்ல காலம் பொறந்திருச்சு நாடும் வீடும் செழிச்சிருச்சு
புனிதர் கோயில் தொறந்திருச்சு நமக்கு புதுவாழ்வு மலர்ந்திருச்சு
பாமாலை பாடிடுவோம் சவேரியாரே – உங்க
பாதம் தொட்டு வணங்கிடுவோம் சவேரியாரே
கொண்டாடி மகிழ்ந்திடுவோம் சவேரியாரே – உமக்கு
கோவில்கட்டி கும்பிடுவோம் சவேரியாரே
இயேசுசாமி வார்த்தைகளை பேசி வந்த போதகரே
இறையரசின் தூதுவரே சவேரியாரே – 2
இஞ்ஞாசியார் கண்டெடுத்த இயேசு சபை மாமுனியே – 2
இறைவன் தந்த அருங்கொடையே சவேரியாரே
வாழியவே வாழியவே சவேரியாரே – எங்க
விசுவாச நாயகனே சவேரியாரே
தென்னாட்டுப் பகுதியிலே கடலோர ஊர்களிலே
நற்செய்தி போதித்த சவேரியாரே – 2
நம்பி வந்த எங்களது முன்னோர்கள் யாவருக்கும் – 2
ஞானஸ்நானம் வழங்கிய சவேரியாரே –வாழியவே
கட்டுமர ஓடத்திலே கடல் மீது போகையில
கிட்டிருந்து காத்திடுமே சவேரியாரே – 2
அலையோடு போராடி வலைவீசும் வேளையிலே – 2
நல்லாசி தந்திடுமே சவேரியாரே –வாழியவே

nalla kaalam poranthiruchchu naadum veedum selichchiruchchu
punithar koyil thoranthiruchchu namakku puthuvaalvu malarnthiruchchu
paamaalai paadiduvom savaeriyaarae – unga
paatham thottu vanangiduvom savaeriyaarae
konndaati makilnthiduvom savaeriyaarae – umakku
kovilkatti kumpiduvom savaeriyaarae
yesusaami vaarththaikalai paesi vantha pothakarae
iraiyarasin thoothuvarae savaeriyaarae – 2
injnjaasiyaar kanndeduththa yesu sapai maamuniyae – 2
iraivan thantha arungaொtaiyae savaeriyaarae
vaaliyavae vaaliyavae savaeriyaarae – enga
visuvaasa naayakanae savaeriyaarae
thennaattup pakuthiyilae kadalora oorkalilae
narseythi pothiththa savaeriyaarae – 2
nampi vantha engalathu munnorkal yaavarukkum – 2
njaanasnaanam valangiya savaeriyaarae –vaaliyavae
kattumara odaththilae kadal meethu pokaiyila
kittirunthu kaaththidumae savaeriyaarae – 2
alaiyodu poraati valaiveesum vaelaiyilae – 2
nallaasi thanthidumae savaeriyaarae –vaaliyavae


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com