Paareer Gethsamane Poongavil Enn Nesaraiye பாரீர் கெத்சமனே
பாரீர் கெத்சமனே
பூங்காவில் என் நேசரையே
பாவி எனக்காய் வேண்டுதல் செய்திடும்
சத்தம் தொனித்திடுதே
சரணங்கள்
1. தேகமெல்லாம் வருந்தி
சோகமடைந்தவராய்
தேவாதி தேவன் ஏகசுதன்
படும் பாடு எனக்காகவே — பாரீர்
2. அப்பா என் பாத்திரமே
நீக்கும் நின் சித்தமானால்
எப்படியாயினும் சித்தம் செய்ய என்னை
தத்தம் செய்வேன் என்றாரே — பாரீர்
3. ரத்தத்தின் வேர்வையாலே
மெத்தவும் நனைந்ததே
இம்மானுவேல் உள்ளம் உருகியே
வேண்டுதல் செய்தாரே — பாரீர்
4. மும்முறை தரைமீது
தாங்கொணா வேதனையால்
உன்னதன் தாமே வீழ்ந்து ஜெபித்தாரே
பாதகன் மீட்புறவே — பாரீர்
paareer kethsamanae
poongaavil en naesaraiyae
paavi enakkaay vaennduthal seythidum
saththam thoniththiduthae
saranangal
1. thaekamellaam varunthi
sokamatainthavaraay
thaevaathi thaevan aekasuthan
padum paadu enakkaakavae — paareer
2. appaa en paaththiramae
neekkum nin siththamaanaal
eppatiyaayinum siththam seyya ennai
thaththam seyvaen entarae — paareer
3. raththaththin vaervaiyaalae
meththavum nanainthathae
immaanuvael ullam urukiyae
vaennduthal seythaarae — paareer
4. mummurai tharaimeethu
thaangaொnnaa vaethanaiyaal
unnathan thaamae veelnthu jepiththaarae
paathakan meetpuravae — paareer