Parama Vithiya Arumai பரம வைத்தியா அருமை ரட்சகனே பிணிதீர்க்கும்
பரம வைத்தியா அருமை ரட்சகனே பிணிதீர்க்கும்
வைத்தியப் பணியினை ஆசீர்வதியும் ஐயனே
பிணியாளிக்கு நம்பிக்கை தாருமே – மருந்தோடே உமது
பேரதிசய கிருபை கூருமே
உள்ளக் கனிவோடுழைக்கும் வைத்தியர்க்கும் – அவருடன் துணைநின்று
உதவும் தொண்டர்கள் யாவர்க்கும் இரங்கும்
சயமும் சுரமும் பயமுறுத்துமே – இதைத் தடுத்திடக் கொடை
தரும் பெரியோரைப் பெருகச் செய்யுமே
அரிய நூதன முறைகள் காணவே – ஆராய்ச்சிகள் செய்யும்
அறிஞரால் புது வழிகள் தோன்றவே
ஜெபத்தைக் கேட்கிற தேவன் நீரல்லவா? எங்கள் ஜெபத்தினால் சுகம்
ஜெகத்தில் பரம்பச் செய்யும் வல்லவா
parama vaiththiyaa arumai ratchakanae pinnitheerkkum
vaiththiyap panniyinai aaseervathiyum aiyanae
pinniyaalikku nampikkai thaarumae – marunthotae umathu
paerathisaya kirupai koorumae
ullak kanivodulaikkum vaiththiyarkkum – avarudan thunnainintu
uthavum thonndarkal yaavarkkum irangum
sayamum suramum payamuruththumae – ithaith thaduththidak kotai
tharum periyoraip perukach seyyumae
ariya noothana muraikal kaanavae – aaraaychchikal seyyum
arinjaraal puthu valikal thontavae
jepaththaik kaetkira thaevan neerallavaa? engal jepaththinaal sukam
jekaththil parampach seyyum vallavaa