Parisutham Pera Ummandai Vandhu பரிசுத்தம் பெற உம்மண்டை வந்து
பரிசுத்தம் பெற உம்மண்டை வந்து
நிற்கும் மாபாவி நான் – எனை
ஆட்கொண்டு நிதம் உம் அருள் தந்து
கிருபையால் பெலப்படுத்தும்
இதயக்கதவை திறந்தேனே
என் உள்ளில் வாரும் இயேசு சுவாமி
பெலவீனம் யாவையும் போக்கி
காத்துக்கொள்ளும் இறைவா
பூவுலக சப்தமும் என் மாம்ச சப்தமும்
இணைந்து ஒலிக்குதே – ஆனால்
மெல்லிய உம் சத்தம் தெளிவாகக் கேட்டிட
என் செவியை திறந்திடுமே
என் கரம் உம் கையை பிடித்துக் கொண்டால்
தவறி விடுவேனே – ஆனால்
உம் கரம் என் கையை பிடித்துக் கொண்டால்
ஒருபோதும் தவறிடேனே
parisuththam pera ummanntai vanthu
nirkum maapaavi naan - enai
aatkonndu nitham um arul thanthu
kirupaiyaal pelappaduththum
ithayakkathavai thiranthaenae
en ullil vaarum yesu suvaami
pelaveenam yaavaiyum pokki
kaaththukkollum iraivaa
poovulaka sapthamum en maamsa sapthamum
innainthu olikkuthae - aanaal
melliya um saththam thelivaakak kaettida
en seviyai thiranthidumae
en karam um kaiyai pitiththuk konndaal
thavari viduvaenae - aanaal
um karam en kaiyai pitiththuk konndaal
orupothum thavaritaenae