Pithaave Endru Ummai பிதாவே என்று உம்மை அழைக்க
பிதாவே என்று உம்மை அழைக்க
கர்த்தாவே துரோகிக்கும் அருள் கூர்ந்தீர்
அன்பான தெய் வம் நீரே என்றுணர
ஆத்துமக் கண் திறந்தீர்!
1. பாவங்கள் தொலைந்து
ஆவியை அளித்து
மறுரூபம் எனக்களித்தீர் – என்
மகன், சகோதரன், சினேகிதன் என்றே
கர்த்தாவே எனை அழைத்தீர் – என்
2. ஆத்தும, தேகம் என் உயிர் எல்லாம்
உயிர்பலியாக்குகிறேன்
ஆவியின் மழையால்
அனுதினம் நனைத்தே
உத்தமனாய் நிறுத்தும் – என்னை
3. என் பார்வை, பேச்சு, சித்தம்,
செயல் எல்லாம்
உம்அன்பை வெளிப்படுத்த
கருணையின் வெள்ளம்
நெஞ்சினில் ஊற்றி
வெற்றி வரம் தாரும் – என் நாதா
4. உம் நினைவே என் ஏக்கமாய் கொள்வேன்
நாதா நான் நிதம் தொழுவேன்
இரவு பகலுமாய் வாழ்நாள்முழுவதும்
உம்மையே பின் செல்வேன் – தேவா
pithaavae entu ummai alaikka
karththaavae thurokikkum arul koorntheer
anpaana they vam neerae entunara
aaththumak kann thirantheer!
1. paavangal tholainthu
aaviyai aliththu
maruroopam enakkaliththeer – en
makan, sakotharan, sinaekithan ente
karththaavae enai alaiththeer – en
2. aaththuma, thaekam en uyir ellaam
uyirpaliyaakkukiraen
aaviyin malaiyaal
anuthinam nanaiththae
uththamanaay niruththum – ennai
3. en paarvai, paechchu, siththam,
seyal ellaam
umanpai velippaduththa
karunnaiyin vellam
nenjinil ootti
vetti varam thaarum – en naathaa
4. um ninaivae en aekkamaay kolvaen
naathaa naan nitham tholuvaen
iravu pakalumaay vaalnaalmuluvathum
ummaiyae pin selvaen – thaevaa