Tharisu Nilankal Anaiththum தரிசு நிலங்கள் அனைத்தும் பலன்கொடுக்க வேண்டுமே
தரிசு நிலங்கள் அனைத்தும் பலன்கொடுக்க வேண்டுமே
வேத வசன விதைகள் எங்கும் விதைக்கப்படவேண்டுமே
தீர்க்கதரிசனம் உரைக்கப்படனும் – தேவ
வாக்குத்தத்தங்கள் நிறைவேறணும்
1. வேத வசனம் அது தேவ வசனம் – அதை
அறிவிப்பதும் நம் கடனல்லவா?
விதைத்திடுங்கள் வசனம் விதைத்திடுங்கள்
கோதுமை மணிகளாய் பயன்பட வாழுங்கள் (2)
2. இயேசுவின் இரட்சிப்பினை சொல்வது இலட்சியமா?
இலக்கை இழந்தால் உப்புத்தூண் அல்லவா?
தயங்குவதா? தரித்து நிற்பதா?
கலப்பையில் கைவைத்து பின் திரும்பிப் பார்ப்பதா (2)
3. பாரத விளைநிலம் முற்றிலும் விளைந்தது
புண்ணிய நதிகளில் மூழ்கிட விரையுது
அறுத்திடுவோம் சுயத்தை பதறாக்குவோம்
ஜெபித்து ஜெபித்து பின் களத்தை நிரப்புவோம் (2)
tharisu nilangal anaiththum palankodukka vaenndumae
vaetha vasana vithaikal engum vithaikkappadavaenndumae
theerkkatharisanam uraikkappadanum – thaeva
vaakkuththaththangal niraivaeranum
1. vaetha vasanam athu thaeva vasanam – athai
arivippathum nam kadanallavaa?
vithaiththidungal vasanam vithaiththidungal
kothumai mannikalaay payanpada vaalungal (2)
2. yesuvin iratchippinai solvathu ilatchiyamaa?
ilakkai ilanthaal uppuththoonn allavaa?
thayanguvathaa? thariththu nirpathaa?
kalappaiyil kaivaiththu pin thirumpip paarppathaa (2)
3. paaratha vilainilam muttilum vilainthathu
punnnniya nathikalil moolkida viraiyuthu
aruththiduvom suyaththai patharaakkuvom
jepiththu jepiththu pin kalaththai nirappuvom (2)