Ullam Udainthu உள்ளம் உடைந்து சோகத்தில் அமிழ்ந்து
உள்ளம் உடைந்து சோகத்தில் அமிழ்ந்து
பாரங்களால் நான் சோர்ந்து நிற்கையில்
உம்முகத்தை நான் தேடும் ஜெபவேளை
உம் பிரசன்னம் நான் வாஞ்சித்திருப்பேன்
உயர்த்துவீர் கன்மலைகள்மேல் நிற்க
உயர்த்துவீர் அலைகள் கடந்தே
ஏந்திசுமப்பேன் தப்புவிப்பேன் உன்னை
என்றுரைத்தீர் நான் உம்மை நம்புவேன்
களைப்படைந்து சோறுவோர் அநேகர்
வாலிபரும் இடறி போவாரே
கர்த்தருக்கு காத்திருந்து நிற்பவர்
கழுகை போல் பெலன் அடைவாரே
மரண பள்ளத்தாக்கினில் நடந்து
பொல்லாப்பை கண்டு அஞ்சாதிருப்பேன்
எனக்கு ஜீவன் உள்ள நாட்களெல்லாம்
நன்மை கிருபை என்றும் தொடரும்
ullam utainthu sokaththil amilnthu
paarangalaal naan sornthu nirkaiyil
ummukaththai naan thaedum jepavaelai
um pirasannam naan vaanjiththiruppaen
uyarththuveer kanmalaikalmael nirka
uyarththuveer alaikal kadanthae
aenthisumappaen thappuvippaen unnai
enturaiththeer naan ummai nampuvaen
kalaippatainthu soruvor anaekar
vaaliparum idari povaarae
karththarukku kaaththirunthu nirpavar
kalukai pol pelan ataivaarae
marana pallaththaakkinil nadanthu
pollaappai kanndu anjaathiruppaen
enakku jeevan ulla naatkalellaam
nanmai kirupai entum thodarum