Unthan Stham Pola உந்தன் சித்தம் போல என்னை
உந்தன் சித்தம் போல என்னை
ஒவ்வொரு நாளும் நடத்தும்
எந்தன் சித்தம் போல அல்ல
என் பிதாவே என் தேவனே
இன்பமுள்ள ஜீவியமோ
அதிக செல்வம் மேன்மைகளோ
துன்பமற்ற வாழ்வுகளோ
தேடவில்லையே அடியான்
நேர் வழியோ நிரப்பானதோ
நீண்டதுவோ குறுகியதோ
பாரம் சுமந்தோடுவதோ
பாரில் பாக்கியமானதுவே
ஏது நலமென்ற்றிய
இல்லை ஞானம் என்னில் நாதா
தீதிலா நாமம் நிமித்தம்
நீதி வழியில் திருப்பி
அக்கினி மேக ஸ்தம்பங்களில்
அடியேனை என்றும் நடத்தி
அனுதினமும் கூட இருந்து
அப்பனே ஆசீர்வதியும்
unthan siththam pola ennai
ovvoru naalum nadaththum
enthan siththam pola alla
en pithaavae en thaevanae
inpamulla jeeviyamo
athika selvam maenmaikalo
thunpamatta vaalvukalo
thaedavillaiyae atiyaan
naer valiyo nirappaanatho
neenndathuvo kurukiyatho
paaram sumanthoduvatho
paaril paakkiyamaanathuvae
aethu nalamenta்riya
illai njaanam ennil naathaa
theethilaa naamam nimiththam
neethi valiyil thiruppi
akkini maeka sthampangalil
atiyaenai entum nadaththi
anuthinamum kooda irunthu
appanae aaseervathiyum