Vaalipaththin Naatgalile Ninaiththidu வாலிபத்தின் நாட்களிலே நினைத்திடு
வாலிபத்தின் நாட்களிலே நினைத்திடு
,
உன்னை உருவாக்கின சிருஷ்டிகரை
,
பெலனுள்ள நாட்களில் முழுபெலத்தால்
,
அவரிலே நீயும் அன்பு கூர்ந்திடுவாய்
,
,
எழுப்பிடும் தொனி கேளாயோ ?
,
எழும்பிடும் காலமல்லோ
,
விழித்தெழு வாலிபனே !
,
விழித்தெழு கன்னியரே !
,
,
1. கண்களெல்லாம் மங்கலாய் போகுமுன்னே
,
பல்லெல்லாம் விழுந்து போகுமுன்னே
,
பெலன்குன்றி நடை தடுமாறு முன்னே
,
உன் உடல் மண்ணுக்கு திரும்புமுன்னே – எழுப்பிடும்
,
,
2. இயேசு இல்லா வாழ்க்கையெல்லாம் வெறுமைதானே
,
இயேசுவோடு நீ இணைந்தால் பெருமைதானே
,
அவரோடு நீ நடந்தால் மகிமைதானே
,
வருகையிலே நின்றிடுவாய் இயேசு முன்னே – எழுப்பிடும்
,
,
3.வாலிபத்தில் நுகத்தை நீ சுமந்தால்
,
பத்திரமாய் பேழையிலே இருந்திடுவாய்
,
உடைப்பட்டு உருவெடுத்து நீயும் வந்தால்
,
கர்த்தரின் கரத்திலே பயன்படுவாய் – எழுப்பிடும்
vaalipaththin naatkalilae ninaiththidu
,
unnai uruvaakkina sirushtikarai
,
pelanulla naatkalil mulupelaththaal
,
avarilae neeyum anpu koornthiduvaay
,
,
eluppidum thoni kaelaayo ?
,
elumpidum kaalamallo
,
viliththelu vaalipanae !
,
viliththelu kanniyarae !
,
,
1. kannkalellaam mangalaay pokumunnae
,
pallellaam vilunthu pokumunnae
,
pelankunti natai thadumaatru munnae
,
un udal mannnukku thirumpumunnae – eluppidum
,
,
2. yesu illaa vaalkkaiyellaam verumaithaanae
,
yesuvodu nee innainthaal perumaithaanae
,
avarodu nee nadanthaal makimaithaanae
,
varukaiyilae nintiduvaay yesu munnae – eluppidum
,
,
3.vaalipaththil nukaththai nee sumanthaal
,
paththiramaay paelaiyilae irunthiduvaay
,
utaippattu uruveduththu neeyum vanthaal
,
karththarin karaththilae payanpaduvaay – eluppidum