Vaarum Bethlagem Vaarum வாரும் பெத்லெகேம் வாரும் – வாரும்
வாரும் பெத்லெகேம் வாரும் – வாரும்
வரிசையுடனே வாரும்
வாரும் எல்லோரும் போய் வாழ்த்துவோம் யேசுவை
வாரும் விரைந்து வாரும்
எட்டி நடந்து வாரும் – அதோ
ஏறிட்டு நீர் பாரும்
பட்டணம்போல் சிறு பெத்லெகேம் தெரியுது
பாரும் மகிழ்ந்து பாரும்
ஆதியிலத மேவை – அந்நாள்
அருந்திய பாவவினை
ஆ திரிதத்துவ தேவன் மனிதத்துவ
மாயினர் இது புதுமை
விண்ணுலகாதிபதி – தீர்க்கார்
விளம்பின சொற்படிக்கு
மண்ணுலகில் மரிகன்னி வயிற்றினில்
மானிடனா யுதித்தார்
சொல்லுதற் கரிதாமே – ஜோதி
சுந்தர சோபனமே
புல்லணையிற் பசுமுன்னணையிற்பதி
பூபதிதான் பிறந்தார்
மந்தை மாடடையில் – மாது
மரியவள் மடியதனில்
கந்தைத் துணியதை விந்தைத் திருமகன்
காரணமாய் அணிந்தார்
தூதர் பறந்துவந்து – தேவ
துந்துமி மகிழ்பாட
மாதவ ஞானிகள் ஆயர்கள் பணிந்து
மங்களமொடு நாட
vaarum pethlekaem vaarum – vaarum
varisaiyudanae vaarum
vaarum ellorum poy vaalththuvom yaesuvai
vaarum virainthu vaarum
etti nadanthu vaarum – atho
aerittu neer paarum
pattanampol sitru pethlekaem theriyuthu
paarum makilnthu paarum
aathiyilatha maevai – annaal
arunthiya paavavinai
aa thirithaththuva thaevan manithaththuva
maayinar ithu puthumai
vinnnulakaathipathi – theerkkaar
vilampina sorpatikku
mannnulakil marikanni vayittinil
maanidanaa yuthiththaar
solluthar karithaamae – jothi
sunthara sopanamae
pullannaiyir pasumunnannaiyirpathi
poopathithaan piranthaar
manthai maadataiyil – maathu
mariyaval matiyathanil
kanthaith thunniyathai vinthaith thirumakan
kaaranamaay anninthaar
thoothar paranthuvanthu – thaeva
thunthumi makilpaada
maathava njaanikal aayarkal panninthu
mangalamodu naada