Vairaakkiya Vaagnsaiyoetu வைராக்கிய வாஞ்சையோடு செயல்படுவேன் என்று
வைராக்கிய வாஞ்சையோடு செயல்படுவேன் என்று
வானம் பூமி தந்த தேவன் வாக்களித்தாரே!
வீணான திகில் கலக்கம் சோர்வு நீங்கி யாவரும்
உண்மையோடு தேவனைத் துதித்து பாடுவோம்
1. வேரில் துளிர்க்கும் இளம் தளிர் போல
தேவ ஜனம் நாம் எழும்பிடுவோமே!
வேர்கள் ஆழம் செல்ல மேலே வளர்ந்து
நாமும் கனி கொடுக்கும் மரங்கள் போலவே!
அணியணியாய் தேவ சேனை பெருகி தேசம் எங்கிலும்
பணிபுரியும் தேவ இராஜ்ஜியம் விரைந்து பெருகிடும்!
2. கோலியாத்தைப் போல் எதிரிகள் சூழ்ந்து
வந்து நின்று நிந்தனைகள் செய்தபோதிலும்
ஆமானைப்போல் சதிகள் செய்து
ஊழியத்தை வேரறுக்க முனைந்தபோதிலும்
பதிலளிக்கும் தேவன் முன்னே முழந்தாளிட்டு வேண்டுவோம்!
எதிரிகளும் ஆண்டவரைப் பணிவார் காணுவோம்!
3. திறந்தவாசல் இன்று உண்டு
தேவையுள்ள ஆத்துமாக்கள் எங்கிலும் உண்டு
திறப்பின் முன் நின்று சிலுவை நோக்கி
தேசத்தைத் திருப்புவோம் சுதந்தரிப்போமே
கிரயமின்றி பாவமீட்பை இந்தியர்கள் பெற்றிட
கிரயம் செலுத்தும் வீரராக எழும்புவோம் நாமே
vairaakkiya vaanjaiyodu seyalpaduvaen entu
vaanam poomi thantha thaevan vaakkaliththaarae!
veennaana thikil kalakkam sorvu neengi yaavarum
unnmaiyodu thaevanaith thuthiththu paaduvom
1. vaeril thulirkkum ilam thalir pola
thaeva janam naam elumpiduvomae!
vaerkal aalam sella maelae valarnthu
naamum kani kodukkum marangal polavae!
anniyanniyaay thaeva senai peruki thaesam engilum
pannipuriyum thaeva iraajjiyam virainthu perukidum!
2. koliyaaththaip pol ethirikal soolnthu
vanthu nintu ninthanaikal seythapothilum
aamaanaippol sathikal seythu
ooliyaththai vaerarukka munainthapothilum
pathilalikkum thaevan munnae mulanthaalittu vaennduvom!
ethirikalum aanndavaraip pannivaar kaanuvom!
3. thiranthavaasal intu unndu
thaevaiyulla aaththumaakkal engilum unndu
thirappin mun nintu siluvai nnokki
thaesaththaith thiruppuvom suthantharippomae
kirayaminti paavameetpai inthiyarkal pettida
kirayam seluththum veeraraaka elumpuvom naamae