Visuvaasamey Nam Jeyamey விசுவாசமே நம் ஜெயமே
விசுவாசமே நம் ஜெயமே
விலை மதியா தோர்
நல் பொக்கிஷமே
விசுவாசமாம் கேடகம் தாங்கி
விசுவாச பாதையில் முன்னேறுவோம்
1.மலை போன்ற துன்பங்கள் நெருங்கிடினும்
மலையாதே யாவும் அகன்றிடுமே வியாதி
வருத்தம் போராட்டம் வந்தும்
விசுவாசத்தால் நாமும் ஜெயமடைவோம்
2.எரிகோவின் மதில்கள் தகர்ந்திடவே
ஏகிச் சென்றான் பக்தன் யோசுவாவும்
விசுவாசத்தாலே முன்னேறியே நாம்
வல்லவர் பெலத்தால் வென்றிடுவோம்
3.விசுவாசம் காத்திட தம் ஜீவனை
விசுவாச வீரர்கள் இழந்தனரே
நல்ல போராட்டம் போராடியே
நாம் விசுவாசத்தை என்றும்
காத்துக் கொள்வோம்
4.விசுவாச நம்பிக்கை அறிக்கையிலும்
திடமான மனதுடன் நிலைத்திருப்போம்
வாக்கு மாறாத கர்த்தரை நிதமும் விசுவாசத்தோடு நாம்
பின் செல்லுவோம்
5.பாவங்கள் பாரங்கள் அகற்றிடவே
நாம் பரிசுத்தர் சிந்தையை அணிந்திடுவோம்
இயேசுவை நோக்கி சீராக ஓடி
விசுவாச ஓட்டத்தை முடித்திடுவோம்
visuvaasamae nam jeyamae
vilai mathiyaa thor
nal pokkishamae
visuvaasamaam kaedakam thaangi
visuvaasa paathaiyil munnaeruvom
1.malai ponta thunpangal nerungitinum
malaiyaathae yaavum akantidumae viyaathi
varuththam poraattam vanthum
visuvaasaththaal naamum jeyamataivom
2.erikovin mathilkal thakarnthidavae
aekich sentan pakthan yosuvaavum
visuvaasaththaalae munnaeriyae naam
vallavar pelaththaal ventiduvom
3.visuvaasam kaaththida tham jeevanai
visuvaasa veerarkal ilanthanarae
nalla poraattam poraatiyae
naam visuvaasaththai entum
kaaththuk kolvom
4.visuvaasa nampikkai arikkaiyilum
thidamaana manathudan nilaiththiruppom
vaakku maaraatha karththarai nithamum visuvaasaththodu naam
pin selluvom
5.paavangal paarangal akattidavae
naam parisuththar sinthaiyai anninthiduvom
yesuvai nnokki seeraaka oti
visuvaasa ottaththai mutiththiduvom