Yesu Nasaraiyinathipathiye யேசு நசரையினதிபதியே –
யேசு நசரையினதிபதியே –
நரர்பிணை யென வரும் ரட்சகனே!
தேசுறு பரதல வாசப் பிரகாசனே
ஜீவனே, அமரர் பாவனே மகத்துவ – யேசு
1. இந்த உலகு சுவை தந்து போராடுதே
எனதுடலும் அதோடிசைந்து சீராடுதே
தந்திர அலகை சூழ நின்று வாதாடுதே
சுவாமி, பாவியகம் நோயினில் வாடுதே!
2. நின் சுய பெலனல்லால் என்பெலன் ஏது
நினைவு, செயல், வசனம் முழுதும்
பொல்லாது, தஞ்சம் உனை
அடைந்தேன், தவற விடாது
தாங்கி ஆள் கருணை ஓங்கிஎப்போதும்
3. கிருபையுடன் என் இருதயந்தனில்
வாரும் கேடு பாடுகள் யாவையும்
தீரும் பொறுமை, நம்பிக்கை, அன்பு
போதவே தாரும்;
பொன்னு லோகமதில்
என்னையும் சேரும்!
yaesu nasaraiyinathipathiyae –
nararpinnai yena varum ratchakanae!
thaesutru parathala vaasap pirakaasanae
jeevanae, amarar paavanae makaththuva – yaesu
1. intha ulaku suvai thanthu poraaduthae
enathudalum athotisainthu seeraaduthae
thanthira alakai soola nintu vaathaaduthae
suvaami, paaviyakam nnoyinil vaaduthae!
2. nin suya pelanallaal enpelan aethu
ninaivu, seyal, vasanam muluthum
pollaathu, thanjam unai
atainthaen, thavara vidaathu
thaangi aal karunnai ongieppothum
3. kirupaiyudan en iruthayanthanil
vaarum kaedu paadukal yaavaiyum
theerum porumai, nampikkai, anpu
pothavae thaarum;
ponnu lokamathil
ennaiyum serum!