• waytochurch.com logo
Song # 18980

காலங்கள் வெறுமையாய் தினம் நகருதே

Song Kaalangal Verumaiyai


காலங்கள் வெறுமையாய் தினம் நகருதே
வாழ்க்கையில் தோல்விகள் வந்து சேர்ந்ததே
ஆனாலும் இயேசுவை நான் நம்புவேன்
மனிதர் முன்பாகவே என்னை உயர்த்துவார்

காலங்கள் மாறும் கவலைகள் தீரும்
கண்ணீர் மறையும் நேரமிது

நிர்முலமாகாதது என் இயேசுவின் சுத்த கிருபை
முடிவில்லா இரக்கத்தால் என்னை தாங்கி தேற்றினீர்
குறை குற்றங்கள் யாவையும் மன்னித்து எனை மாற்றினீர்
ஏன் தோல்விகள் ஒவ்வொன்றிலும்
வெற்றியின் இரகசியம் சொல்லி தந்தீர் - எனக்கு
வெற்றியின் இரகசியம் சொல்லி தந்தீர்

முயற்சிகள் தோற்றாலும் நான் முறிந்து போவதில்லை
கடனில் நான் முழ்கினாலும் நான் கலங்கி தவிப்பதில்லை
கர்த்தருக்கு சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்
என் சோதனை ஒவ்வொன்றிலும்
ஜெபத்தின் வல்லமையை கற்றுத்தந்தீர் - எனக்கு
ஜெபத்தின் வல்லமையை கற்றுத்தந்தீர்






காலங்கள் வெறுமையாய் தினம் நகரலாம்
வாழ்க்கையில் தோல்விகள் வந்து சேரலாம்
ஆனாலும் இயேசுவை நீ நம்பிடு
மனிதர் முன்பாகவே உன்னை உயர்த்துவார்






காலங்கள் மாறும் கவலைகள் தீரும்
கண்ணீர் மறையும் நேரமிது - 2


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com