• waytochurch.com logo
Song # 19012

இயேசு எங்கள் மேய்ப்பர்


இயேசு எங்கள் மேய்ப்பர் இயேசு எங்கள் மேய்ப்பர்
கண்ணீர் துடைப்பார் ; மார்பில் சேர்த்தணைத்து

பயம் நீக்குவார் ; துன்பம் நேரிட்டாலும்,
இன்பம் ஆயினும், இயேசுவின் பின் செல்வோம்
பாலர் யாவரும்.

2 நல்ல மேய்ப்பர் சத்தம்
நன்றாய் அறிவோம் ; காதுக்கின்பமாக
கேட்டுக் களிப்போம் ; கண்டித்தாலும், நேசர்
ஆற்றித் தேற்றுவார் ; நாங்கள் பின்னே செல்ல
வழி காட்டுவார்.

3.ஆட்டுக்காக மேய்ப்பர்
ரத்தம் சிந்தினார் ; அதில் மூழ்கினோரே
துாயர் ஆகுவார் ; பாவ குணம் நீக்கி
முற்றும் ரட்சிப்பார் ; திவ்விய துாய சாயல்
ஆக மாற்றுவார்.

4.இயேசு நல்ல மேய்ப்பர்
ஆட்டைப் போஷிப்பார் ; ஓனாய்கள் வந்தாலும்,
தொடவே ஒட்டார் ; சாவின் பள்ளத்தாக்கில்
அஞ்சவே மாட்டோம் ; பாதாளத்தின்மேலும்
ஜெயங்கொள்ளுவோம்.

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com