• waytochurch.com logo
Song # 19018

கிருபையால் உயர்த்தினீரே

Kirubaiyal Uyarthineerae


ஒன்றும் இல்லாத என்னை
உம் கிருபையால் அழைத்தவரே (2)
தகுதி இல்லாத என்னை
உம் மகிமையால் உயர்த்தினீரே (2)

நன்றி நன்றி நன்றி அய்யா (2)
வாழ்நாள் முழுவதுமாய் (4)

மறவேன் உந்தன் கிருபையை(இரக்கத்தை) நான்
தருவேன் என்னை முழுவதுமாய் (2)
மீண்டும் மீண்டும் இடறி விழுந்தாலும்
கரம் நீட்டி என்னையும் தூக்கினீரே
உங்க அன்பின் நிமித்தம் என்னை என்றும்
கரங்களினால் என்னை மீட்டவரே

நன்றி நன்றி நன்றி அய்யா (2)
வாழ்நாள் முழுவதுமாய் (4)

சிலுவை அன்பை பார்த்ததினால்
பிழைத்து கொண்டேன் கிருபையினால்
ரத்தம் சிந்தி மீட்டதினால்
நிலை நிற்கிறேன் கிருபையினால்
உங்க கூட எப்போதும் உறவாட
ஆவியினால் என்னை நிரப்பிடுமே
உங்க கூட என்றென்றும் நடந்திட
மகிமையினால் என்னை நிரப்பிடுமே

நன்றி நன்றி நன்றி அய்யா (2)
வாழ்நாள் முழுவதுமாய் (4)


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com