என் எதிர்காலம்
En Ethirkalam
எந்தன் வாழ்வின் ஏக்கமே உந்தன் சித்தம் செய்வதே-2
என்னுடையவரே நான் உம்முடையவளே-2
என் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன் என் இயேசுவே
என் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன்
எனக்காக நீர் வைத்துள்ள திட்டங்கள் பெரியதே-2
அவை நான் அறிந்துகொள்ள உந்தன் ஆவி போதுமே-2
என் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன் என் இயேசுவே
என் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன்
என் தேவைகளெல்லாம் அறிந்தவரே
என் இதயம் புரிந்தவரே
முடிவெடுப்பேன் எந்தன் வாழ்விலே
உம்மை மகிழ செய்யவே
என் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன் என் இயேசுவே
என் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன்

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter