• waytochurch.com logo
Song # 19980

Neer Ennai Thanguvathal நீர் என்னை தாங்குவதால்


நீர் என்னை தாங்குவதால்
தூங்குவேன் நிம்மதியாய்-2
படுத்துறங்கி விழித்தெழுவேன்
கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்-2-நீர் என்னை

1.எதிர்த்தெழுவோர் பெருகினாலும்
கர்த்தர் கைவிட்டார் என்று சொன்னாலும்
கேடகம் நீர் தான் மகிமையும் நீர் தான்
தலை நிமிர செய்பவர் நீர் தான்-என்-2

படுத்துறங்கி விழித்தெழுவேன்
கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்-2-நீர் என்னை

2.கடந்த நாட்களில் நடந்த காரியம்
நினைத்து தினம் கலங்கினாலும்-2
நடந்ததெல்லாம் நன்மைக்கேதுவாய்
என் தகப்பன் நீர் மாற்றுகிறீர்-2

படுத்துறங்கி விழித்தெழுவேன்
கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்-2-நீர் என்னை

3.இன்று காண்கின்ற எகிப்தியரை
இனி ஒருபோதும் காண்பதில்லை-2
கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்கின்றார்
காத்திருப்பேன் நான் பொறுமையுடன்-2

படுத்துறங்கி விழித்தெழுவேன்
கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்-2-நீர் என்னை




                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com