• waytochurch.com logo
Song # 19988

அல்லேலூயா சொல்லி

Alleluia solli


அல்லேலூயா சொல்லி அகமகிழ்வாங்க
ஆராதனை பாடி குதூகலிப்பாங்க
ஆசீர்வாதம் கண்டு அகமகிழ்வாங்க
எங்க சபை ஜனம் உசுரே ஏசப்பா

விசுவாசத்தோடு ஜெபம் செய்வாங்க
வேத வசனத்தை சொல்லி மகிழ்வாங்க
விண்ணப்பங்களை பாடித் துதிப்பாங்க
எங்க சபை ஜனம் உசுரே ஏசப்பா

சரணம் 1
தேவன் நமக்காக
நம்மை அழைக்கின்றார்
கர்த்தர் உன்னதமே
காண்பாய் உன்னிடமே
தேவனது காருண்யம் என்னில் வந்து
என் கேடகமும் மகிமைமும் தோன்றும் என்று
வாழ்த்துகிற தேவனே
உயிரெல்லாம் உயிரெல்லாம்
என் உயிருக்கு பிடித்தது என்று சொல்ல என் தேவனை விட இங்கே ஒன்றுமில்லை
தேவ கீர்த்தனம் பாடுவேன் ஜீவனுள்ள நாளெல்லாம்

சரணம் 2
தேவன் நமக்காக
நம்மை அழைக்கின்றார்
கர்த்தர் உன்னதமே
காண்பாய் உன்னிடமே
பூமி அடியினில் உடலோ மூழ்கி விட்டால்
பூச்சிகள் போர்வையாய் மூடிக்கொள்ளும்
பிரிந்த உயிரோ எங்கு செல்லும் நீர் சொல்லும்
எண்ணி செய்யும் காரியத்தில் நன்மை செய்யும்
மனதினை தேவனிடம் கொண்டு வய்யும்
மரண முற்றுப்புள்ளி என்ன செய்யும் என்ன செய்யும்

விசுவாசத்தோடு ஜெபம் செய்வாங்க
வேத வசனத்தை சொல்லி மகிழ்வாங்க
விண்ணப்பங்களை பாடித் துதிப்பாங்க
எங்க சபை ஜனம் உசுரே ஏசப்பா



                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com