Neenga Nanacha நீங்க நெனச்சா
நீங்க நெனச்சா எல்லாம் ஆகும்
நீங்க நெனச்சா எல்லாம் கூடும்
அப்பா நீங்க நெனச்சா எல்லாம் ஆகும்
நீங்க நெனச்சா எல்லாம் கூடும்
மனிதனின் யோசனை பயனில்லையே
ஏசைய்யா நினைவுகள் நடந்திடுமே-2-நீங்க நெனச்சா
சோதனை வந்திட்ட வேளை
அதில் ஜெயிச்சிட வச்சீங்க நீங்க
துன்பங்கள் வந்திட்ட வேளை
அதில் திடன் கொள்ள வச்சீங்க நீங்க -2
பாடுகள் பட்டிட்ட வேளை
உங்க வசனத்தில் உயர்த்திவிட்டீங்க
சோர்வுகள் ஆட்கொண்ட வேளை
உம்மை துதிப்பதால் நீக்கிவிட்டீங்க
என்னை வழுவாமல் இறுக்கி பிடிச்சு வச்ச யேசப்பா நீங்க
நீங்க நெனச்சா..
மனமெல்லாம் உடஞ்சிட்ட போதும்
அதை ஆற்றிய தேற்றிபுட்டீங்க
இனமெல்லாம் பகச்சிட்ட போதும்
உங்க மார்போடு அணைச்சிபுட்டீங்க -2
உங்க வேதத்தினால் எங்க வாழ்க்கையினை
வாழ்ந்திட வழி காட்டினீங்க
உங்க த்யாகத்தினால் எங்க மனங்களையும்
நீங்களே வென்றுபுட்டீங்க
எம்மை ஆற்றி தேற்றி தங்கிகிட்ட யேசப்பா நீங்க