உம்மை பாடவா
Ummai Paadava
உமைப் பாடவா அய்யா உம்மை பாடவா என்னை அழைத்தீரையா
உத்தமனே உன்னதனே உயர்ந்த அடைக்கலமே
ஒன்றுக்கும் உதவா என்னை உம் அருளைத் தந்தீரே (2)
தாயின் அய்யா தாயின் கர்ப்பத்திலே தெரிந்தெடுத்தீரே அய்யா
தாயின்……தாயின் கர்ப்பத்திலே தெரிந்தெடுத்தீரே அய்யா
காணாத வெண் காசை கண்டெடுத்தீரே அய்யா
கடல் போன்ற மணலிலே துரும்பாக கிடந்த என்னை
கடல் போன்ற மணலிலே துரும்பாக கிடந்த என்னை
கசப்பான இருதயத்தை கரும்பாக மாற்றினீரே – உமைப் பாடவா
மரண அய்யா மரண பள்ளத்தாக்கில் நான் நடந்த போதெல்லாம்
மரண அய்யா மரண பள்ளத்தாக்கில் நான் நடந்த போதெல்லாம்
கரம் பிடித்து வழி நடத்தி கண்மணி போல் காத்தீரே
அலை போன்ற சோதனைகள் அழிக்க வந்த வேளையெல்லாம்
அலை போன்ற சோதனைகள் அழிக்க வந்த வேளையெல்லாம்
கன்மலையின் வெடிப்பினிலே மறைத்து என்னை உயர்த்தினீரே – உமைப் பாடவா

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter