Natchathiram Vaanil நட்சத்திரம் வானத்தில்
நட்சத்திரம் வானத்தில் வந்தது
மேசியாவின் பிறப்பை சொன்னது-2
கிழக்கின் சாஸ்திரிகள் இயேசுவை தேடி வந்து
அவரை கண்டடைந்தார்கள்
இயேசு பாலனை தேடியே சென்றனர்
நாமும் இயேசுவை தேடியே செல்லுவோம்-4
1.நமக்கொரு பாலகன் பிறந்தாரே
நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டாரே
கர்த்தர்த்துவம் அவரின் தோளில் இருக்குமே
அதிசயமானவர் அவரே-2
இயேசு பாலனை தேடியே சென்றனர்
நாமும் இயேசுவை தேடியே செல்லுவோம்-2
2.ஆலோசனைக்கர்த்தரே வல்லமையின் தேவனே
நித்திய பிதாவும் அவரே
சமாதான பிரபுவே சர்வ ஜோதியே
இராஜாதி இராஜனும் அவரே-2
இயேசு பாலனை தேடியே சென்றனர்
நாமும் இயேசுவை தேடியே செல்லுவோம்-2