பரிசுத்த அலங்கார துதியுடனே
Parisutha Alangara Thudiyudane
பரிசுத்த அலங்கார துதியுடனே
பரம பிதாவை பணிந்து தொழுவேன்
பகலிரவு ஓய்வில்லா புகழ் பாடல் பாடுவேன்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் நீரே
1, சிலுவை சுமந்து பாவ சிறை போக்க சித்தம் கொண்டு
பரிசுத்த இரத்தம் சிந்தி மீட்டவரே
மரித்துயிர்த் தெழுந்தவரே மரணத்தை வென்றவரே
- பகலிரவு
2, பரிசுத்த ஆவியான துணையாளரே
பரிவோடு என்னக்காக வேண்டினீரே
பலத்தினால் இடைக்கட்டும் பரம் பொருளே
- பகலிரவு