• waytochurch.com logo
Song # 20717

thirumbi parkiren திரும்பி பார்கிறேன்


திரும்பி பார்கிறேன் வந்த பாதையை
கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன் (2)

நடத்தினீர் என்னை அமர்ந்த தண்ணீரண்டையில்
தூக்கினீர் என்னை உந்தன் பிள்ளையாக்கினீர் (2)
திருப்பி தர ஒன்றும் இல்லையே

1.மாராவின் கசப்பை என்னில் நீங்க செய்தீரே
மதுரமான வாழ்வை எனக்கு திருப்பி தந்தீரே (2)
மகிழ்ச்சியினால் எந்தன் உள்ளம் நிரம்ப செய்தீரே (2)

மகிமைப்படுத்துவேன் மகிமைப்படுத்துவேன்
ஜீவனுள்ள காலமெல்லாம் உம்மை உயர்த்துவேன் (2)
- திரும்பி பார்கிறேன்

2.சோதனைகள் சூழ்ந்த வேளை கதறி கூப்பிட்டேன்
சோரமல் உம் கரத்தால் அனைத்து கொண்டீரே (2)
சொல்லி முடியா நன்மைகளை எனக்கும் செய்தீரே (2)

நன்றி சொல்லுவேன் நன்றி சொல்லுவேன்
ஜீவனுள்ள காலமெல்லாம் உம்மை வாழ்த்துவேன் (2)
- திரும்பி பார்கிறேன்  • title
  • Name :
  • E-mail :
  • Type

© 2019 Waytochurch.com