• waytochurch.com logo
Song # 20728

வெண்பனி சிந்தும் முன்

Venpani Sindhum Mun


வெண்பனி சிந்தும் முன் பனி காலம்
சில்லெனும் காற்றையும் வீசுமே
என் விழி என்றும் என் விழி என்றும்
உம் முகம் பார்க்கவே ஏங்குதே
என் நெஞ்சம் ஈரமானதே
உள்ளன்பால் காதலானதே
உம் அன்பில் நனைந்து போனதே
இயேசுவே…. இயேசுவே… ஹோ..-வெண்பனி

பார்க்க பார்க்க ஆனந்தம்
பாதம் தீண்ட ஆனந்தம்
மௌனமான நேரத்தில்
கண்கள் பாடும் ராகத்தில்
கோடி கோடி எண்ணங்கள்
வாட்டுகின்ற நேரத்தில்
பாரமான இதயத்தில்
தேவன் சேரும் நேரத்தில்
நமக்காகவே வழக்காடுவார்
என்றென்றும் அன்போடு தாங்குவார்-வெண்பனி

காற்றும் நீரும் தாலாட்டும்
காதல் கொண்டு வந்தாடும்
இனிமையான சாமத்தில்
உம்மை தேடும் நேரத்தில்
கூட்டம் சேர்ந்து கொண்டாடும்
ஏக்கத்தோடு பண்பாடும்
சாலையோர தென்றலும்
மெல்ல தேடும் உம் முகம்
கலங்காமலே இருப்பாய் என
நம் தேவன் அன்போடு சொல்கிறார்-வென்பனி




                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com