அன்பே மனித உருவமாய்
Anbe Manidha Uruvamai
அன்பே மனித உருவமாய்
அவதரித்தார், நம்மில் பிறந்தார்
என்றும் இம்மானுவேலராய்
தோன்றினார், நம்மில் வாழ்கின்றார்
அவர் நாமம் உயர்த்தி பாடிடுவோம்
அல்லேலூயா அல்லேலூயா (2)
அவர் மகிமையை எங்கும் பறைசாற்றுவோம்
அல்லேலூயா அல்லேலூயா (2)
வானத்தில் வெளிச்சம் தோன்றியதும்
அந்த மகிமை இருளை நீக்கியது
நம் வாழ்க்கையின் இருளை நீக்கிடவே
அந்த ஒளியை நமக்காய் தந்தாரே
அவர் அன்பை ருசித்த நாமும்
அந்த ஒளியில் தினமும் வாழ்ந்திடுவோம்
Verse 2
நம்மை ஐஸ்வரியனாய் மாற்றிடவே
அவர் ஏழையின் கோலமாய் பிறந்தாரே
மண்ணில் குப்பையாய் இருந்த மானிடரை அவர்
மனிதனாய் நிற்க செய்தாரே
அவர் கிருபை பெற்ற நாமும்
அவர் ராஜ்யத்தை கட்டிட உதவி செய்வோம்