• waytochurch.com logo
Song # 20733

விழி மூடியும் நீர்த்துளி

Vizhi Moodiyum Neerthuli


விழி மூடியும் நீர்த்துளி வழியுதே
விழும் துளிகளில் நினைவுகள் சிதையுதே
நான் கொண்ட காயம் பெரியதே
நான் கண்ட பலதில் அறியதே...2
நான் போகும் பாதை புதியதே
ஆனால் உம் சத்தம் தேற்றுதே...2

விழி மூடியும் நீர்த்துளி வழியுதே
விழும் துளிகளில் நினைவுகள் சிதையுதே

இழந்த தருணம் மறந்து போனீர் என்று எண்ணினேன்
வனைந்த கரமே உடைத்ததேன்று புலம்பி ஏங்கினேன்
வனைந்தவர் உடைக்கல...
என்னையும் மறக்கல...
சீரமைப்பாரிவர் என்பதை நம்புவேன்

விழி மூடியும் நீர்த்துளி வழியுதே
விழும் துளிகளில் நினைவுகள் சிதையுதே

உமது வாக்கு தரையில் என்றும் விழுவதில்லையே
தாமதங்கள் வார்த்தை தரத்தை குறைப்பதில்லையே
சொன்னதை மறக்கல
கேட்டதை மறுக்கல
வார்த்தையின் ஆற்றலால்
எந்நிலை மாறுதே

விழி மூடியும் நீர்த்துளி வழியுதே
விழும் துளிகளில் நினைவுகள் சிதையுதே
நான் கொண்ட காயம் பெரியதே
நான் கண்ட பலதில் அறியதே...2

நான் போகும் பாதை புதியதே
ஆனால் உம் சத்தம் தேற்றுதே
நான் போகும் பாதை புதியதே
இயேசுவின் சத்தம் தேற்றுதே....




                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com