Enakkaa Ithana Kiruba எனக்கா இத்தன கிருபை
எனக்கா இத்தன கிருபை
என் மேல் அளவற்ற கிருபை-2
என்ன விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும்
என்னை மட்டும் கிருபை இன்று தேடி வந்ததே
என்ன விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும்
என்னை மட்டும் கிருபை இன்று உயர்த்தி வைத்ததே
உங்க கிருபை என்னை வாழ வைத்ததே
உங்க கிருபை என்னை தூக்கி சுமக்குதே
உங்க கிருபை என்னை வாழ வைத்ததே
உங்க கிருபை என்னை பாட வைத்ததே
பயனற்ற நிலத்தை போல மறக்கப்பட்டவன் நான்
அறுவடை காணாமல் தணிந்து போனவன் நான்
தரிசான என்னில் தரிசனத்தை வைத்து
அறுவடையை துவக்கி வைத்தவரே
உங்க கிருபை என்னை வாழ வைத்ததே
உங்க கிருபை என்னை தூக்கி சுமக்குதே
உங்க கிருபை என்னை வாழ வைத்ததே
உங்க கிருபை என்னை பாட வைத்ததே
தோல்வியின் ஆழங்களில் மூழ்கிப்போனவன் நான்
வாழ்ந்திடும் நோக்கம் தனை இழந்து போனவன் நான்-2
அற்பமான என்னை அற்புதமாய் மாற்றி
அற்புதங்கள் செய்ய வைத்தவரே
எனக்கா இத்தன கிருபை
என் மேல் அளவற்ற கிருபை-2
என்ன விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும்
என்னை மட்டும் கிருபை வந்து உயர்த்தி வைத்ததே
என்ன விட எத்தனை பேர் நல்லவனாக இருந்தும்
என்னை மட்டும் தேடி வந்து சுமந்து கொண்டதே
உங்க கிருபை என்னை வாழ வைத்ததே
உங்க கிருபை என்னை தூக்கி சுமந்ததே
அல்லேலூயா உங்க கிருபை போதுமே