இறைவா உந்தன் அரசு மலர உழைக்க வருகின்றேன்
Iraiva Unthan arasu malara ulaikka varugindren
இறைவா உந்தன் அரசு மலர உழைக்க வருகின்றேன்ஏழை எளியோர் ஏற்றங் காண என்னைத் தருகின்றேன்இதயம் மகிழ்ந்து ஏழை என்னை பலியாய் ஏற்றிடுவாய்கனிவாய் மாற்றிடுவாய்1. உலகம் யாவும் வெறுமை என்றுஉன்னைப் பணிந்தேன் தஞ்சம் என்றுகுயவன் கையில் களிமண் போலஉனது பணிக்காய் என்னைத் தந்தேன்உனக்காய்த் தானே வாழுகின்றேன்எந்தன் உயிரும் உந்தன் சொந்தம்தடைகள் மலையாய்ச் சூழ்ந்து கொண்டால்தயக்கமின்றி எழுந்து நடப்பேன்ஆபேல் தந்த உயர்ந்த பலி போல்அன்பே உனக்காய் காணிக்கையாகிறேன்2. துடுப்பை இழந்த படகைப் போலதனித்து தவித்துக் கலங்கும் நேரம்விழியைக் காக்கும் இமையைப்போலஅன்பின் கரத்தால் அணைத்துக் காப்பாய்முடவன் போல என்னை மாற்றதினமும் உழைக்கும் மனிதருண்டுமண்ணில் விழுந்து மடிந்த பின்னும்முளைக்கும் விதைபோல் உயிர்த்து எழுவேன்மழையைத் தேடும் பயிரைப்போலஅன்பே உனையே தேடிவந்தேன்