எந்தன் சின்ன இதயம்
Enthan Chinna Idhayam
எந்தன் சின்ன இதயம் அதில்
எத்தனை காயங்கள்
இருள் சூழ்ந்த உலகில் தானே
எத்தனை பாரங்கள்
தொட்டதெல்லாம் தோல்வி ஆனால்
தொல்லைகளே தொடர்கதை ஆனால்
ஏங்கி நிற்கும் என் இதயமே
உன்னால் தாங்கிட தான் முடியுமோ
என் காயம் ஆற்ற காயப்பட்டீரே
என் துன்பம் நீக்க நொறுக்கப்பட்டீரே
கழுவும் என்னை உம் இரத்தத்தால்-எந்தன்
பாவ கறை நீங்க
அலையென துன்பம் என்னை சூழ்ந்த போதும்
வழுவாமல் காத்தார் என் நேசரே
குயவன் கையில் மண்பாண்டமாய்
இயேசென்னை வனைந்திடுவார்
எந்தன் சின்ன இதயம் அதில்
என்றும் இயேசுவே
இருள் சூழ்ந்த உலகில் தானே
என் துணை இயேசுவே

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter