• waytochurch.com logo
Song # 20762

என் இயேசு மிகவும் பெரியவர்

En Yesu migavum Periyavar


என் இயேசு மிகவும் பெரியவர்
என் இயேசு மகத்துவமானவர்
என் இயேசு சர்வவல்லவர்
என் இயேசு சர்வம் ஆள்பவர்

கைகளை உயர்த்தி
இருதயம் உயர்த்தி
உதடுகள் உயர்த்தி
உம் நாமம் போற்றுவேன்

கைகளை உயர்த்தி
இருதயம் உயர்த்தி
உதடுகள் உயர்த்தி
உம் நாமம் சொல்லுவேன்

மாறாத தேவன் என்னை மறவாத தெய்வம் நீரே
மேலான தேவன் என் மேன்மையாக இருப்பவரே
மாராவின் நீரை அன்று மதுரமாக மாற்றிய தெய்வம்
என் வாழ்வின் மாராவை மதுரமாக மாற்றியவர்

ஆ..அல்லேலுயா – (3)
ஓஒ…
ஆ..அல்லேலுயா – (3)
ஓசன்னா...

தேவாதி தேவன் என்னை தேற்றி ஆற்றும் தேற்றரவாளன்
தூயாதி தூயர் என தூதர் போற்றும் தூயவர்
வானாதி வானவர் இனி-வரப்போகும் மன்னவர் நீரே
ராஜாதி ராஜனே என் கர்த்தாதி கர்த்தரே
ஆ..அல்லேலுயா – (3)
ஓஒ…
ஆ..அல்லேலுயா – (3)
ஓசன்னா...




                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com