Naan Vaazhuvaen நான் வாழுவேன்
நான் வாழுவேன் (2)
எந்த சூழ்நிலைகள் வந்தாலும்
தொடர் தோல்விகள் நேர்ந்தாலும்
நீர் இருக்கையிலே
எனக்கு குறைவு இல்ல
நீர் இருக்கையிலே
வெட்கப்பட்டு போவது இல்ல
தனி மரமாக நான் விழுந்தேனே
நம்பிக்கையை இழந்து நான் தவித்தேனே
துணையாக யாருமின்றி துடித்தேனே
துக்கத்தோடு அங்கும் இங்கும் திரிந்தேனே
என்னுடைய கதறலை கேட்டீரே
தூரத்திலே இருந்தென்னை அறிந்தீரே
நீரே என்னை தேடி ஓடி வந்தீரே
நேசன் எனது ஜீவன் பாதுகாத்தீரே
புது வாழ்வை தந்தீரே
சிறுமையை கண்ணோக்கி பார்த்தீரே
அழுகையின் குரலையும் கேட்டீரே
உலகமும் தூசித்ததை கண்டீரே
உறவுகள் வெறுத்ததை அறிந்தீரே
அடியேனை திரும்பவும் நினைத்தீரே
அழகான வெகுமதி கொடுத்தீரே
நீரே எனது ஜீவன்
எல்லாம் ஆனீரே
உமக்காய் சாட்சியாக வாழ வைத்தீரே
நீரே போதுமே