• waytochurch.com logo
Song # 20800

சேனைகளின் கர்த்தாவே உமது வாசஸ்தலங்கள்



சேனைகளின் கர்த்தாவே
உமது வாசஸ்தலங்கள்
எவ்வளவு இன்பமானவைகள்
ஆயிரம் நாளைப் பார்க்கிலும்
உமது பிரகாரத்தில் ஒரு நாள் நல்லது
ஆகாமிய கூடாரங்கள் அழியுமே
என் தேவா உந்தன் வாசலில்
காத்திருந்தால் போதுமே - சேனைகளின்
சாலமோன் தேவ ஆலயம்
உந்தனின் மகிமையால் நிறைந்தது போலவே
எந்தனை நிரப்பிடும் இயேசுவே
நான் உந்தனின் மகிமையை
ஊருக்கெல்லாம் சொல்லுவேன் - சேனைகளின்
ஊற்றிடும் உந்தன் ஆவியை
உந்தனின் பிள்ளைகள் எங்களின் மீதிலே
அனல் மூட்டி எழுப்பிடும் தேவனே
நான் ஆவியாலே நிறைந்து உமக்காக வாழ்ந்திட - சேனைகளின்
அற்புதம் செய்திடும் தேவனே
இப்போதே எங்களில் இறங்கியே வாருமே
அபிஷேகம் பண்ண வேண்டுமே
உம் தரிசனம் கண்டடி எந்தன் உள்ளம் நாடுதே - சேனைகளின்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com