என்னைக் கழுவியருளும் ஈசோப்பினால் சுத்திகரியும்
என்னைக் கழுவியருளும்
ஈசோப்பினால் சுத்திகரியும்
பாவம் துர்க்குணம் பொல்லாப்பு நீங்க
உம் இரத்தத்தால் கழுவும்
துர்குணத்தில் நான் உருவானேன்
உமக்கு விரோதமாய் பாவஞ் செய்தேன்
இரட்சணியத்தின் சந்தோஷத்தை தந்து
உற்சாகமான ஆவியால் தாங்கும் - என்னைக்
கண்களின் இச்சை மாம்ச இச்சை
ஜீவனத்தின் பெருமை யாவுமே
பிதாவினாலுண்டாகாதவையே
என்னை விட்டகற்றிடும் என் இயேசுவே - என்னைக்
ஆத்துமா மண்ணோடு ஒட்டியதால்
ஜென்ம சுபாவமும் என்னில் உள்ளதே
மண்ணின் சாயலை நான்களைந்தே
தேவனின் சாயலை அடைந்திடவே - என்னைக்
கண்களின் காட்சியில் நான் நடந்தேன்
நாவினால் பொல்லாங்கு கூறினேன்
சிந்தையும் நோக்கமும் தீயவையே
என்னிலே பரிசுத்தம் ஏதுமில்லை - என்னைக்
ஜெபிக்கவே தவறிய காலம் பல
அனல் குன்றி வாழ்ந்திட்ட நேரம் பல
உம் சித்தம் செய்யாத சமயம் பல
வேதத்தை கேளாத வேளை பல - என்னைக்
பெருந்திண்டியாலும வெறியினாலும்
லௌகீகமான கவலையாலும்
எந்தன் இருதயம் பாரமாகாமல்
உந்தன் வருகையில் நான் நிற்கவே - என்னைக்