• waytochurch.com logo
Song # 20819

எக்காளம் ஊதிடுவோம் எரிகோவை தகர்த்திடுவோம்



எக்காளம் ஊதிடுவோம்
எரிகோவை தகர்த்திடுவோம்
கர்த்தரின் நாமம் உயர்த்திடுவோம்
கல்வாரி கொடி ஏற்றுவோம்
கிதியோன்களே புறப்படுங்கள்
எதிரிகளைத் துரத்திடுங்கள்
தீபங்களை ஏந்திடுங்கள்
தெருத்தெருவாய் நுழைந்திடுங்கள் - எக்
சிம்சோன்களே எழும்பிடுங்கள்
வல்லமையால் நிறம்பிடுங்கள்
சீறிவரும் சிங்கங்களை
சிறைபிடித்து கிழித்திடுங்கள் - எக்
தெபோராக்களே விழித்திடுங்கள்
உபவாசித்து ஜெபித்திடுங்கள்
எஸ்தர்களே கூடிடுங்கள்
இரவுகளைப் பகலாக்குங்கள் - எக்
அதிகாலையில் காத்திருப்போம்
அபிஷேகத்தால் நிறைந்திடுவோம்
கழுகுபோல பலனடைந்து
கர்த்தருக்காய் பறந்திடுவோம் - எக்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com