• waytochurch.com logo
Song # 20820

உள்ளமெல்லாம் உருகுதையோ உத்தமனை நினைக்கையிலே



உள்ளமெல்லாம் உருகுதையோ
உத்தமனை நினைக்கையிலே
உம்மை யல்லால் வேறே தெய்வம்
உண்மையாய் இங்கில்லையே
கள்ளனென்று தள்ளிடாமல்
அள்ளி என்னை அணைத்தவர்
சொல்லடங்கா நேசத்தாலே உம்
சொந்த மாக்கிக் கொண்டீரே
எத்தன் என்னை உத்தமனாக்க
சித்தம் கொண்டீர் என் இயேசையா
எத்தனையோ துரோகம் நான் செய்தேன்
அத்தனையும் நீர் மன்னித்தீர்
இரத்தால் சிந்த வைத்தேனே நான்
அத்தனையும் என் பாவமன்றோ
கர்த்தனே உம் அன்புக்கீடாய்
நித்தம் உம்மையே சேவிப்பேன் - உள்ள
மேக மீதில் இயேசு ராஜன்
வேகம் தோன்றும் நாளன்றோ
லோக மீதில் காத்திருப்போர்
ஏக்க மெல்லாம் தீர்ந்திட
தியாக ராஜன் இயேசுவை நான்
முகமுகமாய் தரிசிக்க
ஆவலோடு ஏங்கும் தாசன்
சோகம் நீங்கும் நாள் என்றோ - உள்ள

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com