அழிகின்ற ஆத்துமாவை ஆதாயாம் செய்திடவே
அழிகின்ற ஆத்துமாவை
ஆதாயாம் செய்திடவே
இதோ அடியேன் இருக்கின்றேனே
என்னை அனுப்பும் இன்றே (2)
சிதறுண்டு அலைகின்ற ஆடுகள் போல்
சுற்றித் திரிகின்றாரே
கதறி அழைக்கும் அன்பின் நேசர்
என்னை அனுப்பும் இன்றே (2)
பசியுள்ளவனுக்கு ஆகாரமே
துரத்துண்டவனுக்கு புகலிடமே
பாவி எவர்க்கும் பரிகாரமே
என்னோடு வாரும் இன்றே (2) - அழிகின்ற
நான் பேசும் வார்த்தைகள் உம் வார்த்தையே
நான் செய்யும் கிரியைகள் உம் கிரியையே
நான் கொள்ளும் அறுவடை உம் கிரியையே
இயேசுவே இரட்சகரே! - அழிகின்ற