• waytochurch.com logo
Song # 20834

அருணோதயம் எழுந்திடுவோம் பரனேசுவை துதிப்போம்



அருணோதயம் எழுந்திடுவோம்
பரனேசுவை துதிப்போம்
அருணோதயம் பரமானந்தம்
பரனோடுறவாடவும்
இதைப் போன்றொரு அருணோதயம்
எமைச் சந்திக்கும் மனமே
ஆ! என்னாந்தம் ஜோதி சூர்யனாம்
எந்தன் நேசர் எழும்பும் நாள்
நன்றியாலுள்ளம் பூரித்திடுதே
அன்னையாமேசு காருண்யம்
ஒவ்வொன்றாயிதைத் தியானஞ் செய்யவும்
எவ்வாறு மேற்ற சந்தர்ப்பம்
போனராவினில் ஜிவித்தோர் பலர்
பூமி விட்டுமே போய்விட்டார்
என்றாலும் நமக்கிந்த நாளையும்
தந்த நேசரை துதிப்போம்
நான் நிர்வாணியாய் வந்த வண்ணம்
நிர்வாணியயங்கு போகின்றேன்
கூடச் செல்லவும் பூவி லொன்றுண்டோ?
நாடிப் போமந்த நாட்டிற்கே
ஆ! யென் நேசரின் அன்பையெண்ணவும்
ஆனந்தம் பரமானந்தம்
ஆ யென் நேசரோர் வான் புவி
தானஞ் செய்ததே ஆனந்தம்
பார் தன் நேசரின் மார்பில் சாய்ந்தேகும்
யாரிவர் கானகந்தனில்
எந்தன் நேசரின் கூடச் செல்கின்றேன்
சொந்த ராஜ்யத்தில் சேரவும்
கொண்டல் மோதும் வறண்ட நாடதில்
அன்பரே கைவிடாதேயும்!
ஆசையோடு நான் வாரேனென் துக்கம்
பாசமாயங்கு தீர்ந்திடும்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com