• waytochurch.com logo
Song # 20835

அரணும் கோட்டையும் பெலனாய் காப்பவர்



அரணும் கோட்டையும்
பெலனாய் காப்பவர்
திடமாய் ஜெயித்திட
எனது என்றென்றும் துணையே
ஜீவ நம்பிக்கை நல்க
இயேசு மரித்து எழுந்தார்
அழிந்திடாத உரிமை பெறவே
மறு ஜென்மம் அடையச் செய்தார் - அரணும்
மகிழ்ச்சி ஆனந்தம் தங்க
மகிமை நம்பிக்கை ஈந்தார்
நீதிமானை செழிக்கச் செய்து
என்றென்றும் ஜெயம் நல்குவார் - அரணும்
உம்மால் மதிலை தாண்டி
உம்மால் சேனைக்குள் பாய்வேன்
எதிர்த்து நின்று ஜெயமே அடைவேன்
என்றென்றும் துணை செய்கின்றார் - அரணும்
வாழ்வில் முன்னேறிச் செல்ல
நல்ல நம்பிக்கை ஈந்தார்
கிருபை சொரிந்து அன்பை பொழிந்தார்
வளர்ந்தே நிலைத்திடுவோம் - அரணும்
இருளை வெளிச்சமாக்க
ஒளியை அருளிச் செய்வார்
எந்தன் தீபம் நின்று எரிய
என்றென்றும் அருள் செய்குவார் - அரணும்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com