• waytochurch.com logo
Song # 21753

பல்லவி பரலோக இராஜ்ஜிய வாசி



பல்லவி
பரலோக இராஜ்ஜிய வாசி
பரன் இயேசுவின் மெய் விசுவாசி
புவி யாத்திரை செய் பரதேசி
பரன் பாதம் நீ மிக நேசி
சரணங்கள்
ஆபிரகாம் ஈசாக்குடனே
ஆதிப் பிதாக்கள் யாவருமே
தேவனுண்டாக்கின மெய் Þதலமே
தேடியே நாடியே சென்றனரே
அந்நியரே பரதேசிகளே - பரலோக
திரும்பியே பாரோம் மறந்த தேசம்
தீவிரம் செல்வோம் - சுய தேசம்
தூதர்கள் வாழும் பரம தேசம்
தூயப் பிதா ஒளி வீசும் தேசம்
மேலோக பக்தரின் சொந்த தேசம் - பரலோக
தனித்தனியே யாத்திரை செல்லுவோம்
கூட்டங்களாகத் திரண்டு செல்வோம்
குடும்பம் குடும்பமாகச் செல்வோம்
ஜாதி ஜனங்களும் கூடிச் செல்வோம்
சேனாதிபதி கர்த்தர் பின் செல்லுவோம் - பரலோக
நன்மையும் மேன்மையுமாம் நகரம்
நல் அÞதிபார புது நகரம்
வாக்குத் தத்தத்தின் திட நகரம்
விசுவாசத்தால் அடையும் நகரம்
ஏறுகின்றோம் சீயோன் சிகரம் - பரலோக
சாவு துக்கம் அங்கே இல்லையே
சாத்தானின் சேனை அங்கில்லையே
கண்ணீர் கவலை அங்கில்லையே
காரிருள் கொஞ்சமும் அங்கில்லையே
பஞ்சம் பசி ஒன்றும் அங்கில்லையே - பரலோக
வெண் வÞதிர பவனி நடக்க
வெண் குருத்தோலை கொடி பறக்க
பேரிடி Þதோத்திர தொனி முழங்க
பெரு வெள்ளம் ஓசைப் பாட்டொலிக்க
கர்த்தரைக் காண்போம் கண் ஜொலிக்க - பரலோக
பொன் பொருள் வேண்டாம் இயேசு போதும்
மண் ஆசை வேண்டாம் இயேசு போதும்
பாவமே வேண்டாம் இயேசு போதும்
லோகமே வேண்டாம் இயேசு போதும்
ஆத்தும இரட்சகர் இயேசு போதும் - பரலோக
நம்பிக்கைப் பொங்கப் பாடிடுவேன்
நல் மனச்சாட்சி நாடிடுவேன்
இத்தரை யாத்திரை கடந்திடுவேன்
அக்கரைச் சேர்ந்து வாழ்ந்திடுவேன்
அந்த தினம் என்று கண்டிடுவேன் - பரலோக


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No
  • Song youtube video link :
    Copy sharelink from youtube and paste it here

© 2025 Waytochurch.com