நேசர் அவர் என் நேசரவர் நேசரிலெல்லாம் விசேஷித்தவர்
நேசர் அவர் என் நேசரவர்
நேசரிலெல்லாம் விசேஷித்தவர்
சோகமடைந்தேன் நேசமதால்
வெண்மையும் சிகப்புமானவர்
கண்ணைக் கவர்ந்திடுபவர் அவரே
பதினாயிரங்களில் சிறந்தவரே
அதிசயமானவர் அவர் பெயரே
இவரென் ஆத்ம நேசரே
வருவார் எனக்காய் வேகமே - நேசர்
அவர் தலை முழுதும் பொன்மயமாமே
அவர் தலைமயிர் சுருள் சுருளாமே
காகத்தின் நிறம் அவர் முடியாமே
லோகத்தின் ஒளி விளக்கவராமே
இவரென் ஆத்ம நேசரே
வருவார் எனக்காய் வேகமே - நேசர்
அவர் கண்கள் கண்ணீர் நிறைந்தவைகள்
கவரும் புறாகண்கள் போன்றவைகள்
பாலிலே கழுவப்பட்டவைகள்
நேர்த்தியாய் பதிக்கப்பட்டவைகள்
இவரென் ஆத்ம நேசரே
வருவார் எனக்காய் வேகமே - நேசர்
அவரின் கன்னங்கள் உதடுகளாம்
மலர்களின் வாசம் வீசிடுமாம்
தங்க வளையல் போல் அவர் கரமாம்
தந்தத்தைப் போல் அங்கம் உடையவராம்
இவரென் ஆத்ம நேசரே
வருவார் எனக்காய் வேகமே - நேசர்
ரூபமதில் அவர்க் கிணை அவரே
லீபனோன் மகிமை உடையவரே
கேதுரு போல் அவர் உயர்ந்தவரே
ஏதமிலா சிறப்பானவரே
இவரென் ஆத்ம நேசரே
வருவார் எனக்காய் வேகமே - நேசர்
வார்த்தை பேசிடும் வாய் மதுரமாமே
வார்த்தைகள் கிருபைகள் பொழிந்திடுமே
வார்த்தை என்பது அவர் ஒரு பெயரே
வார்த்தைகளால் துதி சாற்றிடவே
இவரென் ஆத்ம நேசரே
வருவார் எனக்காய் வேகமே - நேசர்
துள்ளி குதித்து மலை மேட்டினிலே
வந்திடும் நேசரின் தொனியதுவே
ஆரவார சப்தம் முழங்கிக் கொண்டே
மேகத்தில் ஜோதியாய் தோன்றுவாரே
இவரென் ஆத்ம நேசரே
வருவார் எனக்காய் வேகமே - நேசர்