• waytochurch.com logo
Song # 21756

நிலையில்லா உலகத்தில் அலைந்தேனையா நினைத்தென்னை அழைத்தீரே எனதேசையா



நிலையில்லா உலகத்தில் அலைந்தேனையா
நினைத்தென்னை அழைத்தீரே எனதேசையா
மறந்தும்மை மறுதலித்தடங்காமலே
மனம் போன வழிகளில் நடந்தேனையா
மடிந்திடும் என்னைக் கண்டு விரைந்தென்னருகில் வந்து
மனதுருகினீரே ஐயா - என் மேல் - நிலை
சிறந்த உன்முகம் காண விரைந்தாசித்தேன்
சிலுவையின் தரிசனம் அளித்தீரையா
இனிய உன் சத்தம் கேட்டேன் கொடிய என் குணம் விட்டேன்
இனிமேல் என் துணை நீரையா - பூவில் - நிலை
உமக்காக என்னையும் நீர் தெரிந்தெடுத்தீர்
உமதாவி என்னிலீந்து பெலனளித்தீர்
உமையன்றி பூவில் வேறு அடைக்கலம் எமக்கில்லை
உம்மை நம்பி ஜீவிப்பேனையா ஶி இனி
அதிசீக்கிரமாய் நீங்கும் உபத்திரவம்
அதிக நித்திய கனமகிமை தரும்
பலவித இன்னல் கண்டும் சிலவேளை சிட்சை வந்ததும்
பதராமல் பொறுப்பேனையா - இன்னும் - நிலை
உடுக்க உடையும் உண்ண உணவும் தந்தீர்
இடுக்கமான உம் பாதை எமக்களித்தீர்
விசுவாசப் பிரயாணத்தை தொடங்கின தினமுதல்
விசுவாசம் பெருகுதையா - என்னில் - நிலை
இருண்ட கெத்சமனேயில் ஒளி தோன்றுதே
இனிய இயேசையா உந்தன் திருமுகமோ
எனக்கிந்த அனுபவம் அளித்திட திரும்பவும்
தினம் ஜெபம் செய்கின்றேனையா ஶி தேவா - நிலை
எனது மரணமோ உம் வருகை நாளோ
எது முன்பு என்னை வந்து அழைத்திடுமோ
கடைசி முடிவு நாளில் மறவாதீர் என்னை நாதா
கனிவாய் வேண்டுகின்றேனையா - இப்போ - நிலை


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com