anandha vazhvu vendumentru ஆனந்த வாழ்வு வேண்டுமென்று
ஆனந்த வாழ்வு வேண்டுமென்று
அறிஞர் ஒருவர் நினைத்தாராம்
ஆண்டவர் யேசுவின் அருகில் சென்று
அறிவுரை சொல்லும் என்றாராம்
குழந்தையை அழைத்து முன்னிருத்தி
குழந்தை போல் வாழுங்கள் என்றாராம்
வந்தவர் திகைத்து சென்றாராம்
வாழும் வழிதனை மறந்தாராம்
அம்மா அப்பா பெரியோரே
ஆண்டவர் பிள்ளையாய் மாறுங்கள்
அன்பால் உள்ளம் மாறிவிட்டால்
ஆனந்தம் நம்மைத்தேடி வரும்