என் கர்த்தர் எந்தன் தேவைகளை விசாரிப்பவர்
en karthar enthan thevaikalai
என் கர்த்தர் எந்தன் தேவைகளை விசாரிப்பவர்
என்றும் என்னை மறந்திடாமல் ஆதரிப்பவர்
அவர் எந்தன் பெலனும் அரனுமானவர்
கர்த்தர் என்னை தப்புவிப்பவர்
1.என்னை தேடி வந்து நித்தம் அவர் நடத்திடுவார்
தகப்பனை போல் தோள்களிலே சுமந்து தேற்றுவார்
பெற்றதாம் நன்மைகளை எண்ணி எண்ணியே
பேரன்பு கொண்டு நான் என்றும் பாடுவேன்
2.என்னை பெயர் சொல்லி கூப்பிட்டவர் நித்தம் நடத்துவார்
என்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவர்
அனுதினமும் புது பெலனை தந்து நடத்துவார்
என்னை நிர்மூலமாவாமல் காத்திடுவார்